திரும்ப வைக்கும் பொன்சிரிப்பும்
திமிருக் குணமே அறவேயற்ற
தில்சானா எங்கள் சோதரியே...!
தானைத் தலைவரின் தலைமகளே
தாரமாம் நாஸிராவின் மரிக்கொழுந்தே...
தாங்கும் ஜேயெம்மேயின் கடிவாளமே
தாரணியே போற்றும் உன்சேவைதனையே
பழீல் மாமாவின் பவளவிளக்கே
பணிவுடன் கரையும் மதிப்பாளினியே
கிஷோர் மாமாவின்ற “கில்லி” நீயே
கிறங்கடிக்கும் பல்துறை பட்டதாரியே...!
உன்னைப் போற்றிப் பாடவென்றே
உவப்புடன் ஓடி வந்தேன் இன்றே..,
உலகில் உள்ள தமிழ் மொழியில்
உயரிய சொல்லை தேடித்தொலைந்தேன்!
நாளும் ஓடித் தேடி
நானும் களைத்தேன் அகராதி முன்னாடி
பாராட்ட வார்த்தைகள் இன்றி
பார்த்து நின்றேன் கண்ணாடி பின்னாடி...!
உன் சேவை தொடரவேண்டும்
உன் தியாகம் போற்ற வேண்டும்
நீ கண்ட நாளைய சமூகம்
மிடுக்காய் உன்முன் மலர வேண்டும்...!
அன்பான வாழ்த்துக்களுடன்...
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment