Skip to main content

Posts

Showing posts from November, 2020

அருமைத்தாய்

 .         அருமைத்தாய் கருவினிலே என்னை சுமந்து  கரும் இரவுகள் கண்விழித்து.. கண்ணிமைபோல் காத்து நின்ற கலங்கரை விளக்கேயென் தாயே...! ஈரைந்து மாதங்கள் கர்ப்பத்தில் ஈருலகில் உன்மைந்தன் சிறந்திடவே.. கணவேளை கண்ணுறங்கா உனைவிட்டு கடல்கடந்து தொலைதேசம் சென்றேனே...! கணநொடிகள் வருஷங்களாய் கடந்ததுவே கடிகாரமுள்ளும் அவசரமாய் சுற்றியதே.. தலையினிலென் கருமுடியும் நரைத்ததுவே தலைமகனாய் நானுந்தன் அருகிலில்லையே...! சிரம் தாழ்த்தி தரம் உயர்ந்து இகம் போற்றிட வாழவென்றே.. மெழுகாக நீ உருகி அழகுற வழி வகுத்தாய்...! தலைமேலே உனை சுமந்து தரணி முழுதும் சுற்ற வேண்டும்.. தலைவைத்து  உன் மடியில் தலைகோதிட துயில வேண்டும்...! மீதமுள்ள என் ஆயுட்காலம் மீண்டும் உன்னால் சிறக்கவேண்டும்.. உயிர்பிரியும் வேளை வரை உன்பாதம் வணங்க வேண்டும்...!!!                               - sironmany -                                 F M Rozaan

😢😢நல்லடக்கம்.😢😢

 😢😢 நல்லடக்கம் 😢😢 நெருப்பினில் மனிதம் கருகுதய்யா நெஞ்சமும் நொறுங்கி சிதறுதய்யா... வஞ்சங்கள் கொண்ட மாந்தர்தம் வன்மங்கள் விண்ணையும் முட்டுதய்யா...! ஜனாஸாவும் பத்துகள் தாண்டுதய்யா ஜனநாயகம் பொந்தினுல் ஒளிந்ததைய்யா அரக்கனின் இனவாத அசுரப்பிடியால் அனைவரின் கண்முன்னே எரியுதய்யா...! புத்தனைத் துதியும் பெளத்தர்களாய் புன்னகை மலர பெருமை கொள்ளும்... புனிதமாம் இலங்கை திருநாட்டினுல் புரியாத புதிராயொரு எரியூட்டலய்யா...! தொழில்களில் முடக்கம் கண்டோமய்யா தொடரான இறுக்கம் கொண்டோமய்யா.. நகரும் துரோக நடத்தைகளால் நலிந்து துவண்டு வாழ்ந்தோமய்யா...! வாழ்வுகள் நெருக்கடி ஆனதய்யா வரம்புகள் மீறியே போகுதய்யா... வாழ்ந்திட வழியினை தேடியபடி வாடிய வதனமாயெங்கள் கோலமய்யா...! மண்ணறை எங்களை மறுக்கலைய்யா மரணமும் எங்களை வெறுக்கலைய்யா... மனித நேயமற்ற மனிதர்களால் மரணித்து புதைப்பதிலும் மாற்றமய்யா...!  நாட்டிற்குள் உரிமைகள் மீறலய்யா நாளாந்தம் கோசங்கள் ஒலிக்குதய்யா வாழ்வதற்கும் வழிகேடு எம்மவர்க்கு சாவதற்கும் சுடுகாடு தலையெழுத்து...! திருப்பங்கள் சற்றென வந்ததய்யா தினமழுத நெஞ்சமது நெகிழ்ந்ததய்யா... வாழ்வதற்கோர் பிடிமாணம...

SPB....

  * பாடும் நிலா பாலா*  பாசத்தோடு பார்த்து ரசித்த நேசத்தோடு நெகிழ்ந்து மகிழ்ந்த கோஷமெழ மக்களை வென்ற வேஷமற்ற சுப்பரமணி பாலாவே...! “ஆயிரம் நிலவே வா”வென அழகிய குரலால் அரங்கேறி ஆயிரம் ஆயிரம் கீதங்களை அசட்டையாய் பாடி முடித்தாயே நீ...! காதலை ரசத்துடன் பருகிடவே கடவுளை மனதினால் உணர்ந்திடவே தாயின் மடியினில் கரைந்திடவே தாரத்தை நெஞ்சார தாங்கிடவே...! நட்பினை நகைப்பின்றி மதித்திடவே நல்லவர் பெரியரை வணங்கிடவே பாட்டாளி மனமாற குளிர்ந்திடவே பாட்டெடுத்தெம்மை மயக்கினாயே நீ...!  உலகில் வாழும் ரசிகர்களின்றி உன் பிரிவால் துடித்தனரின்று உளமாற நவிலுகிறேன் இன்று உன்னுச்சம் தொட எவருண்டு இங்கு...!  பழகுவதற்கு ஓர்  உடன்பிறப்பாய் பண்புகளுக்கு ஓர் முன்மாதிரியாய்  பாடகனுக்கு மேலொரு பாசப்பிணைப்பை பாரினிலின்று இழந்து நிற்கின்றோம்...! உன் புகழின் உச்சம் இனி உருகாது இவ்வுலகில் நீ துணி உன்பாடலேயிங்கு பலரின் பணி இது SPBயின் கூட்டணி... 😢😪                                     -  sironmany -   ...

ZIYARATH

  !!!நண்பனே சில்மிஷங்கள் குடிகொண்ட சியாரத்தே சிதைந்துட்டோம் நாமுனது விபத்தாலே சிரமங்கள் உனக்கென கேள்வியுற்றோம் சிரிப்பின்றி நாதியற்று உருகி நின்றோம்..! விபத்துக்கள் இன்றிங்கு சாதாரணம் விதிமுறையை மீறுவோரின் அசட்டுத்தனம் விரைந்துட்டோம் வைத்தியசாலை உனைதேடி விறைத்துட்டோம் கட்டிலினில் மேலுனைக்கண்டு...! தலைமுறையாய் நீசெய்த நன்கொடைகள் தனயனுந்தன் தலையையின்று காத்ததுவே தவறுசெய்ய நீயென்றும் முனைந்ததில்லை தவறிக்கூட தப்பெதுவும் நினைந்ததில்லை...  உயிர்கொடுப்பான் தோழனென படித்ததுண்டு உண்மையான தோழமையை பார்த்ததுண்டு உன்னுடைய நண்பர்களை ஒன்று சேர்க்க (YBFல்) உயிரைக்கூட கொடுக்க இன்று முனைந்ததேனோ???!!!... நண்பர்கள் பலபேரைக் கண்டதுண்டு நட்புடன் அகமழிந்து சென்றதுண்டு நட்புக்கு இலக்கணமா உந்தனுடன் நண்பர்கள்நாம் எனக்கூற பெருமையடா.!                                           - sironmany -                                 ...

AZWAR

  தரமான தகைமையான  தன்னடக்கமான தன்னிலை மறவா  தன்னுடன் உள்ளோரை தறம் பிரித்து தறப்படுத்தி  தக்க வைக்கும் தன்னலமற்ற  தன்னாதிக்கமில்லா தனயன் எங்கள்  தனாதிகாரி  அஸ்வர் ஹூசைன் தரணி போற்ற வாழ்த்துகின்றேன்.                          - sironmany -                             F M Rozaan 

My best Friend ... SALIHEEN

உயிர் நண்பன் ஸாலிஹீனுக்காக.... சாமான்ய நண்பன் தனையும் சாதனையாளனாய் மாற்றி மகிழும்  சாகஸ வித்தைக் காரன் ஸாலிகீன் எந்தன் சோதரனே...! கல்லூரி வாழ்வினில் கழிந்த  கலகலத்த தருணங்களை எண்ணி கவலையுடன் நினைவு கூர்ந்து கண்ணிமை நனைய வரைகின்றேன்...! ஈரொம்பது வருஷ காலம் இவ்வுலகில் நீ வாழ்ந்த காலம் ஈசானி மூலை எங்கும் இவன்பெயர் தலைத்து ஓங்கும்...! அன்புக்கு அதிபதியே அருமையான மானுடனே அனைவரையும் கவர்ந்திழுத்த அதிரடி எழுத்தாளனே...! உன் புகழ்பாடி கவிவடிக்க உலகில் சொற்களில்லை நான்பிடிக்க வார்த்தைகள் அற்ற மகத்துவனாய் வாழ்ந்து மடிந்தாய் வரலாற்றிலினிதாய்...! கவிவடிக்க கற்றுக் கொடுத்த கவிஞன் எந்தன் ஆசானே கவிதை உனக்கும் வடிப்பேனென கனவிலும் நான் நினையேனே...! ஆற்றல் பலகொண்ட உன்னை அவசரமாய் காணவே எண்ணி ஆண்டவனும் நாட்டம் கொண்டே அதிவேகமாய் அழைத்தான் போலும்...! நண்பர்கள் நாங்கள் இன்று நாதி இன்றி தவிக்கின்றோம் நண்பனவன் மறுமை வாழ்க்கை நலம் பெறவே துதிக்கின்றோம்....!!!  ( நண்பனின் சுவன வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக... ஆமீன் ஆமீன் )                   ...

அன்பு நண்பன் ஆமிரீன்

செங்குருதி கொண்டோனே செயல்பாட்டு நாயகனே பலவருடம் உனைக் காணா பரிதவிப்புடன் வரைகின்றேன்...! நீயின்றி நானும் இங்கு நிலைகுலைந்து தவிக்கின்றேன் நிஜமாக திரும்பி உந்தன் நிதர்சனத்தை ஏங்குகின்றேன்...! நாட்கள் பல கடந்துமின்னும் நாயகனின் வெண்முகத்தை நாசுக்காக மீண்டும் நோக்க நாயனேதான் நாட வேண்டும்...! கூட்டமாக ஒன்று சேர்ந்த கூட்டணியாம் *YBF* இன் கூரிய வளர்ச்சி பற்றி கூடுதல் கவலை கொண்டீர்...! நேசமுடன் நாமும் ஒன்றாய் நேரிய பாசத்துடன் இங்கு நேர்த்தியாக நடக்க வேண்டி நேரம் ஒதுக்கி பாடுபட்டீர்...! சாணக்கிய அனுகு முறையால் சாமர்த்திய தீர்வுகள் கூறி சாதாரண எங்களையும் சாவகாசமாக இயங்க வைத்தீர்...! மீண்டும் நட்புக் கூட்டணியில் மீழெழுந்து நாமும் செல்ல மிக விரைவில் ஒன்றுகூடி உண்டு மகிழ வேண்டி நிற்கும்.......!!!                              உங்கள் அன்பின்                                - sironmany -                   ...

Mr RIJAN ❣️❣️

மெட்டெடுத்துன் தேன்குரலால் பாடுமெங்கள் *YBF* பாலா நீ...  தமிழ் சினிமா கீதம்தனை  மனம்நெகிழ மீட்டினாயே நீ..!  உன் குரலில் கீதம் கேட்டு  உள்ளம் உருகிப் போனேனே... மறுமுறையும் ஒஸ்மானியா சென்று  மண்டியிட நெஞ்சம் துடித்ததுவே! பசுமையான கல்லூரி நாட்கள் பழகிப்பிரிந்த உயிர் நட்புக்கள் பந்தயம் கட்டிய விளையாட்டுக்கள்  படித்து முடிக்காத கவிதை நூல்கள்... படபடவென அனைத்தும் நினைவில் பட்டாஸைப் போல் வெடித்ததுவே... பரவசம் பொங்க நானும் இன்று  பறந்தேனே தரையில் நின்றுகொண்டு...!!!                                      - sironmany-                                        F M Rozaan

மூன்றெழுத்து

  அன்புக்கும் எழுத்து மூன்று அரவணைப்பால் இணையும் நட்புக்கும் எழுத்து மூன்று. நண்பர்களைக் காணத் துடிக்கும் சகீனுக்கும் எழுத்து மூன்று சந்திப்பை காத்து ஏங்கும் சியாமுக்கும் எழுத்து மூன்று பாட்டினால் அனைவர் மனங்கவர்ந்த ரிஜானுக்கும் எழுத்து மூன்று ரிஜானையே கவர வைத்த றியாஸுக்கும் எழுத்து மூன்று றியாஸ் மேலே காதல் கொண்ட ஜலீலுக்கும் எழுத்து மூன்று நட்புடன் நலம் காண வந்த றுஷானுக்கும் எழுத்து மூன்று நட்பையே தலையாய் மதிக்கும் பாஸிலுக்கும் எழுத்து மூன்று பாஸிலையே கதற வைக்கும் ஜபீனுக்கும் எழுத்து மூன்று..... பாங்கொலி போல் காலை வரும் பைஸலுக்கும் எழுத்து மூன்று நாலெழுத்து நாளையென நகரும் எனக்கும் எழுத்து மூன்று.....                             - sironmany -                               F M Rozaan 

Mr RIJAN

  உன்னை நினைக்கையிலே மலருது மல்லிகை நெஞ்சினில் நீ சிரிக்கையிலே  சிதறுது சில்லரை காதினில்...! உன் கன்னத்தில் விழும் குழியினால் உறங்க முடியவில்லை கண்ணிமை மூடியென்னால் உன் பாட்டில் வரும் மெட்டுக்கள் என்னை  உறங்க வைத்தது கட்டிலின் மேல் கண்ணை...! சிலுக்கு போன்ற உன் நடனத்தைக்கண்டு சிதைந்து போனது என்ற ரெண்டு கண்ணு நயன்தாரா போல் நீ நடப்பதைக் காண நாலாபுறமும் விசிரிகள் முட்டுது வானை...! ஆளான ஆவணி முதலாய் ஆமிரீன் கைபிடிப்பான் என்று ஆசையுடன் ஏக்கமுற நின்று ஆண்மகன் ஏமாற்றியதுதான் இன்று...!                                     - sironmany -                                        F M Rozaan

நிர்வாகக்குழு

  *JAFFNA MUSLIM ASSOCIATION UK* சமூக வலைத்தளமெங்கும் பட்டாசு வாரம் உங்கள் கொமண்டுதான் சமீஷு நம்மோட தலைவரோ கியாஸு அவருக்கு துணையாக ரமீஸு பாடிப் பழகவென்றே றியாஸு நுணுக்கமாய் பேசிட ஜெயிறூஸு யாழ்ப்பாணத்திலே எங்கள் கைஸு இவங்கதான் ஜேயெம்மேட மாஸு                ~ ~ ~ ~ ~ ~ கெதரிங்கில “ஸ்டோல்” என்றால் சபீலு கணிவாக கரம்கொடுக்க கலாமு மலைபோல் தோள் கொடுப்பார் அஜ்மலு கறாரான கணக்குப்பிள்ளை இம்ரானு....                    ~ ~ ~ ~ ~  சடசடவென தெறிக்கவிடும் சவ்ஜீரு சமயோசித புத்திக்காரன் சர்ஜூனு சாண் சாணாய் முன்னேறும் ரவ்சானு தமிழையே கொலை செய்ய ரொஷானு                     ~ ~ ~ ~ ~  வகை வகையா மினுங்குது  சொத்து இவங்களாலதான்  JMAக்கு கெத்து  நாளைய உலகுக்கிதை பறைசாற்று அன்பான எங்கள் நண்பன் ஜவ்சாத்து...!!!                                      - siro...

மக்கா விஜயம்

 தலைவா!!! நீ சென்றதோ மக்கா உணர்த்தி விட்டாய் பக்கா தற்சமயம் மிளிருகிறாய் கொக்காய் இதில் சந்தேகமில்லை மாக்காள்  செய்யவேண்டும் துடுக்காய் அனைத்தமல்களும் மிடுக்காய் வாழ்த்துகிறோம் மனதால் எதிர்பார்க்கிறோம் விரைவில்  உன்வருகையை நிஜமாய்!!!❤️                                - sironmany -                                  F M Rozaan 

பளீல் நாநா

  அன்புக்கு அதிபதியே அருமையான மானுடனே அனைவரையும் கவரந்திழுத்த அறிவிப்பாளன் யாழ் பழீலே! அருஞ் சொல்லால் பல குரலில் அசத்திய மக்கள் பேச்சாளனே அருமையான தமிழ்நடை மொழியில் அள்ளி உதிர்த்த பெட்டகமே!  எங்கள் அமைப்பின் நாயகனே எம்தலைவரின் மாணிக்கமே எங்களை என்றும் அசரவிடாது எழுப்பி  விடும் சிநேகிதனே! உன்மேல் என்றும் பாசம் கொண்டு உயிருக்குயிராய் பந்தம் கொண்டு உரிமையாய் தருவாயென கனவு கண்டு உண்மையாய் இருந்தேன்  விழித்துக்                                                  கொண்டு ஏமாற்றி விட்டாய் நம்பிய என்னை ஏளன மாக்கினாய் மெய்யான அன்பை ஏரெடுத்தும் பாராமல் என்னை எள்ளி நகை ஆடிவிட்டாய் தூய நட்பை..! அற்பத்தொகை ஏழு காசு அதிகமில்லை தர முடியாதிருக்க அநியாயத்திற்கெனை  நீயே இங்கு  அசிங்கப்பட வைத்து விட்டாய்..!  பாருலகம் உள்ள வரை  பழீல் நாநாவை நான் மறவேன் பளிக்கும் ஜேயெம்மே ஜெக்கட்டுக்காக பழைய பலியை தீர்த்துவிட்டார்..!         ...

GIAS NANA

  தலைமைக்கே ஒரு கம்பீரமாய் தன்னிகரற்ற நற்செயல் புரிந்து தனக்கே ஒரு பாணி அமைத்து  தற்செயலினால் கூட ஏதேனும்  தப்புகள் சிறு நடந்திராத வண்ணம் தனியே நின்று சீரமைத்து தம்தோழர் நம்மவர் அனைவர்தனையும் தம்தோள்மேல் கணம் பாரா சுமந்த  எங்கள் கண்ணியமும் கெளரவமுடைய  எங்களனைவர் அன்பும் பாசமும் உடைய  எமதமைப்பின் மதிப்புக்குரிய தலைவரே...!!! எங்கள் உடன்பிறவாத உயிர்நரம்பே...!!! தங்கள் பயணம் நன்றே இனதே உங்கள் மனம் போல் சிறப்புடனமைய கடவுள் ஆசி என்றென்றும் நல்க அமைப்புடன் சேர்ந்து அடியேன் நானும் மனதார வாழ்த்தி விடைபெறும்  உங்கள அன்பின்.......                                            - sironmany -                                         F M Rozaan 

JMA - UK

  JAFFNA MUSLIM ASSOCIATION பதினாறாம் பருவ ஆண்டில் பவனி வரும் ஜே எம் ஏ யே...! பல நூறுந்தன் சேவையினை பறைசாற்ற வரைகின்றேன்... தினம் தினமாம் பல மடல்கள் தினசரியாம் கோரிக்கைகள்  தினவேளை வாழ்க்கைக்கே திண்டாடித்திணறும் நமதுறவுகள்... ஜே எம் ஏ யின் மின்னஞ்சல்தனில் தேங்கி நிற்கும் நிலுவை அது, தொங்காமல் தொடர்ந்து உதவ வங்கியில் பணம்  வைப்பில் இல்லை... தேர்வு செய்து கணக்கில் உள்ள தேவைகளோ மிக அதிகம் தேர்ந்தெடுத்து கொடுத்து உதவ தேடுது மக்கள் நன்கொடை பல... பதினேழாம் நிர்வாக சபை பத்திரமாய் வழி நடாத்த  பக்குவமான தலைமையின் கீழ் பவ்யமான அணிவகுப்பு... மக்கள் துயர் போக்க என மக்கள் மனம் வென்று இங்கு மக்களுக்காய் அவதரித்த மதிப்பிற்குரிய நிறுவனமே...! உன்னை நம்பி பல்லாயிரம்  உருகி மருகி ஏங்கி நிற்க உதவிக்கரம் நீட்ட அங்கு உடனடியாய் சென்றிடுவாய்...!!!                             - sironmany -                              F M Rozaan 

CRAZY WORLD

         வேடிக்கையான உலகம் உண்பதற்கு ஏதுமொரு  உணவு தேடி பலர் அங்கு உழைப்பிற்காய் ஓடுகிறார்கள்  ஊன் உறக்கம் தனை மறந்து..., ஊளைச்சதையை குறைக்கவென்றே ஊர் எழு முன்னெழந்து ஊரவர்களுடன் இணைந்து உடல் எடைக்காய் ஓடுகிறார்கள் இங்கு!!!   விந்தையான உலகம்..... விநோதமான உலகம்.....                                       - sironmany -                                        F M Rozaan 

SHAMEEZ

 சலிக்காமல் என்றென்றும்  சகிப்புடனே புன்னகைபூக்க சங்கத்தின் முதுகெலும்பாய் சமயோசித செயலாளனாய் சமகால அஷ்டாவதானியாய் சர்வதேசத்தின் பீரங்கியாய் சங்கத்தமிழ் எழுத்தாழன் சமீஸ் நண்பர் அவர்களின்        இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.                       🎉🎉🎂🎉🎉  நீங்கள் நீடூடி வாழ்ந்து பல அளப்பரிய சேவைகளை யாழ்மண்ணுக்கு வழங்க வேண்டுமென வாழ்த்தி விடைபெறும் என்றென்றும் உங்கள் ...... !!!                                                                           - sironmany -                                        F M Rozaan 

நட்பு

  “உடலுக்குள் உயிரைச்சுமத்தல் தாய்மை   உயிருக்குள் உறவைச்சுமத்தல் நட்பு”          நம்பிக்கையான நட்புகளுக்கு சமர்ப்பணம்.                                              - Sironmany -                                               F M Rozaan 

தலைவர்

  துறவறம் தலைவரது தனித்தரம் கொடைக்கரம் அவரது இரு கரம்... பயன்தரும் பல்வகை மதி அகம் புகழ் சேர்க்கும் அவர்சேவை நெடுங்காலம் வாழ்க பல்லாண்டு....  வளர்க தூய சேவை...                                         - sironmany -                                         F M Rozaan 

செயலாளன்

  செந்தமிழில் நடை மொழியும் செவ்வாழை இள நிறமும் செவ்வனே கடமை புரியும்  செங்குருதி கொண்டவனே! சென்றனவே சில காலம் காணவில்லை உன் கோலம் ஏனுமின்னும்  மாயாஜாலம் காட்டிடு உன் திருமுகக் கோலம்! செயலாளன் என்பது ஒன்றின் செயல்பாட்டினை வழிநடாத்தி  செம்மையாய் சீராய் அதனை செயல்கொள்ளும் கருமவீரன்..! நாமுமிங்கு  எதிர்பார்க்கும்  நாலாபுறமும் ஒன்றினையும்  நாளாம் அந்த விழா நாளில் நாயகனாய் நீதான் திகழ வேண்டும்! உன் மஞ்சம் பார்த்திருக்கும் நீ அமர காத்திருக்கும் புன்னகை பொழியும் உன்னுரையில் அரங்கமே அதிர வேண்டும்!   கவிதை பல இயம்ப இயலும்  கண்ணன் உந்தன் சிறப்பினை பாட கடமை என்னை அழைக்கின்றது  கண்ணியமாய் நவிலுகின்றேன்!                       - sironmany -                        F M Rozaan 

Funny poem

 அருமையான எந்தன் கவியை அலங்கோலப் படுத்தி விட்டு அநாயோதயமாய் அமர்ந்திருக்கும்  அருமை நண்பன் யாழ் பழீலே! சிங்காரச் சிறு கவி தனை “சிரோன்மணி” யாய் பெயருமிட்டு சிங்கமாய் கருவருத்த என்னை சின்னா பின்னப் படுத்தி விட்டாய்... மென்மையாய் நானும் எனது மெல்லிசை தமிழ் வடிவில் மெதுவாக இயம்பி வந்தேன் மெல்லிய என் கவித் துளிகளை... சிம்மமாய் இருந்த என் சிரோன்மணி எனும் பெயரை குஞ்சாமனி என்று நீயும்  குறும்பாக மாற்றி விட்டாய்! வஞ்சியினர் பலரும் வந்து கொஞ்சிவிட்டு போன எந்தன் மஞ்சமான இனிய பெயரை குஞ்சாமனி என எப்படி சொல்வேன்?!!!😇                                      - sironmany -                                       F M Rozaan 

PRAISE

 கவிதை ...(4) பாட்டெழுதி பரிசில் பெறும் பாடலாசிரியர் அவைதனிலே பாவெழுதி நிரூபிக்கவே பாமரனும் ஓடோடி வந்தேன்  பைத்தியக் காரனென்று லாவகமாய் கூறிவிட்டாய் பார்தனிலே இதுபோலொரு பரிகாசமேதுமுண்டோ!!!?                                    - sironmany -                                    F M Rozaan 

தாலாட்டு

 கவிதை ...(3) தேவையெனில் தருகிறேன் செந்தமிழ்  தேன்கவித்துளிகள்தனை ஆர்வமுடன் இன்பமுற அள்ளித்தருகிறேன் அமுதகவிதனை கேட்போருக்கு இல்லையென  கேளாக்கொடுக்கும் வம்சமிவன் கேட்டவுடன் தருகின்றேன்  அங்கயர்க்கன்னி துயிலார....                            - sironmany -                             F M Rozaan 

TRAVELLING TO ABROAD FOR WORK

கவிதை ( 2 ) நாம்  ஒரே வீட்டில்  வாசம் பழகியதோ பல மாசம் ஆதலால் ஏற்பட்டதோ இந்த பாசம் காட்ட முடியவில்லை  என்னால் றோசம் வெளிதேசம் செல்கிறேன் பல மாசம் காட்டிடாதே என்மேல மோசம் வாங்கி வருகிறேன் வாழ்வதற்கோர் வாசம் கொஞ்சம் கொடு எனக்கு சிறு அவகாசம்!!                                            - sironmany -                                           F M Rozaan 

பிரிவுத் துயர்

Situation; Husband got captured by terrorised  கவிதை ( 1 ) காதலித்து மணமுடித்தேன்  காளை உன்னுடன் வாழ்ந்திடவே காலம் செய்த கோலத்தினால் காத்திருக்கும் கொடுமையின்று.... மாதம் பல உருண்டாலும் மன்னவன் நானுனை மறவேன்  மங்கையிவள் பலவேளை மல்லாக்காய் அழுகுகின்றேன்... விரைவினிலே ஒன்று சேர விண்ணை நோக்கி கரைகின்றேன் காத்திருக்கும் நேரமெல்லாம் கானல் நீராய் கரைந்தனவே!!! கோலம் பல நான் எடுப்பேன்  கோமகன் உனை மீட்டிடவே கொடுங்கோலன் செய்த சதி கொடுமையிலே வீழ்ந்து விட்டான்  பார்த்திருப்பேன் காலமெல்லாம்  பாவை மனம் வதை வதைக்க  பாரினிலே இதுபோலொரு பாவப்பட்ட ஜென்மமுன்டோ!!!                       - sironmany -                       F M Rozaan 

FALEEN NANA

 *பளீல் நாநா* தன்னையே தனக்காக சிதைத்து தனியனாய் ஜேயெம்மேக்கு உழைத்து தற்பெருமை சிறிதுமற கழிந்து தனக்கென்ற சுகதுக்கம் துறந்து தன்னுள்ளெழுந்த எண்ணமதை நினைந்து தனியாக சில திட்டங்களை வகுந்து தரமாக திறம்படவே நெறியமைத்து  தனிப்பாணிதனை தன்னிலுள்ளே வகுத்து தனிப்பெரும் நற்குணங்களின் குவளமாக தனக்கென்ற சிறார்படையின் தளபதியாக  தன்நடத்தையால் அனைவர்தனை வென்று தன்குல மாந்தர்களின் மந்திரியாக  தனக்கான காந்தக்குரலின் அதிபதியாக தத்தளிக்கும் விதவைகளின் அரணாக தயவுடன் குசலம் வினவும் தனயனாக தனக்குள்ளே பல பரிணாமங்களாக தன்னுடனெம்மை  கோர்த்து வாழ்ந்த  தங்க மகன் பளீல் நாநாக்கு தம்பி என அன்புடன் நீயும் தட்டி தடவி ஊக்குவித்த தனயனிவனின் இரங்கல் மடல் இது!!! மாசு ஏதும் அறவும் அற்ற மானஸ்தன் எங்கள் யாழ்பளீல்... மக்கள் மனதில் எப்பவுமே  மகத்தான இடத்தில் வாழ்பவர் சூது வாது கள்ளம் கபடம் சூழ்ச்சி ஏதும் அறியாதவர் சீற்றத்துடன் எப்பொழுதுமெங்கும் சினம் கலைந்து கரைபவர்!! எங்கள் அமைப்பு மேலும் வளர எம்பிக் குதித்து உழைத்தவர் மரணப்படுக்கை வேளையிலும் கூட மறக்காமல் அதை உணர்த்தியவர் ஏழைகளுக்கு உதவனும்...

😢😢துரோகத்தின் வலி😢😢

 😢😢*துரோகத்தின் வலி*😢😢 களை இழந்து கலை இழந்து சேர்த்த செல்வம் அனைத்துமிழந்து மனை இழந்து உறவிழந்து சுற்றுச் சூழல் ஏதுமிழந்து..., தாய் மண்ணை இழந்து தாய்நாட்டினுல்  அடையாளமிழந்து தரணி போற்றும் பண்பாடுமிழந்து தன்மானத்தையும் அன்று இழந்து நின்றோம் கைவிரி கோலமாய்  நாங்களே கைகளில் குழந்தைகளை ஏந்தியே.... கண்களில் கண்ணீரும் பொங்கவே அரவணைக்கும் உள்ளங்களை தேடியே... உடுத்திய  உடுப்புடன் சிதைந்து நின்றோம் உறங்காத விழிகளுடன் கலங்கி நின்றோம் நாளைய தீர்ப்பினில் நம்பிக்கைகொண்டு நாட்களை இன்றுவரை நகர்த்தி வந்தோம். விடியல்கள் இன்றுவரை பிறக்கலையே விதவைக்கோலம் யாழிலின்னும் மாறலையே விஷமிகளின் விருந்தான யாழ்சமூகம் விக்கியின்றும் கண்ணீரினில் மூழ்குதய்யா...! முப்பது வருடங்களை கடந்துவிட்டோம் முதுநிலையை வலியினால் பெற்றுவிட்டோம் மண்ணினிலே எம்மினம் வாழும் மட்டும் மன்னித்து விட்டோம்...மறக்க மாட்டோம்.                                          - sironmany -           ...