Skip to main content

அருமைத்தாய்

 .         அருமைத்தாய்

கருவினிலே என்னை சுமந்து 

கரும் இரவுகள் கண்விழித்து..

கண்ணிமைபோல் காத்து நின்ற

கலங்கரை விளக்கேயென் தாயே...!


ஈரைந்து மாதங்கள் கர்ப்பத்தில்

ஈருலகில் உன்மைந்தன் சிறந்திடவே..

கணவேளை கண்ணுறங்கா உனைவிட்டு

கடல்கடந்து தொலைதேசம் சென்றேனே...!


கணநொடிகள் வருஷங்களாய் கடந்ததுவே

கடிகாரமுள்ளும் அவசரமாய் சுற்றியதே..

தலையினிலென் கருமுடியும் நரைத்ததுவே

தலைமகனாய் நானுந்தன் அருகிலில்லையே...!


சிரம் தாழ்த்தி தரம் உயர்ந்து

இகம் போற்றிட வாழவென்றே..

மெழுகாக நீ உருகி

அழகுற வழி வகுத்தாய்...!


தலைமேலே உனை சுமந்து

தரணி முழுதும் சுற்ற வேண்டும்..

தலைவைத்து  உன் மடியில்

தலைகோதிட துயில வேண்டும்...!


மீதமுள்ள என் ஆயுட்காலம்

மீண்டும் உன்னால் சிறக்கவேண்டும்..

உயிர்பிரியும் வேளை வரை

உன்பாதம் வணங்க வேண்டும்...!!!


                              - sironmany -

                                F M Rozaan

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...