. அருமைத்தாய் கருவினிலே என்னை சுமந்து கரும் இரவுகள் கண்விழித்து.. கண்ணிமைபோல் காத்து நின்ற கலங்கரை விளக்கேயென் தாயே...! ஈரைந்து மாதங்கள் கர்ப்பத்தில் ஈருலகில் உன்மைந்தன் சிறந்திடவே.. கணவேளை கண்ணுறங்கா உனைவிட்டு கடல்கடந்து தொலைதேசம் சென்றேனே...! கணநொடிகள் வருஷங்களாய் கடந்ததுவே கடிகாரமுள்ளும் அவசரமாய் சுற்றியதே.. தலையினிலென் கருமுடியும் நரைத்ததுவே தலைமகனாய் நானுந்தன் அருகிலில்லையே...! சிரம் தாழ்த்தி தரம் உயர்ந்து இகம் போற்றிட வாழவென்றே.. மெழுகாக நீ உருகி அழகுற வழி வகுத்தாய்...! தலைமேலே உனை சுமந்து தரணி முழுதும் சுற்ற வேண்டும்.. தலைவைத்து உன் மடியில் தலைகோதிட துயில வேண்டும்...! மீதமுள்ள என் ஆயுட்காலம் மீண்டும் உன்னால் சிறக்கவேண்டும்.. உயிர்பிரியும் வேளை வரை உன்பாதம் வணங்க வேண்டும்...!!! - sironmany - F M Rozaan