Skip to main content

SPB....

 


*பாடும் நிலா பாலா* 


பாசத்தோடு பார்த்து ரசித்த

நேசத்தோடு நெகிழ்ந்து மகிழ்ந்த

கோஷமெழ மக்களை வென்ற

வேஷமற்ற சுப்பரமணி பாலாவே...!


“ஆயிரம் நிலவே வா”வென

அழகிய குரலால் அரங்கேறி

ஆயிரம் ஆயிரம் கீதங்களை

அசட்டையாய் பாடி முடித்தாயே நீ...!


காதலை ரசத்துடன் பருகிடவே

கடவுளை மனதினால் உணர்ந்திடவே

தாயின் மடியினில் கரைந்திடவே

தாரத்தை நெஞ்சார தாங்கிடவே...!


நட்பினை நகைப்பின்றி மதித்திடவே

நல்லவர் பெரியரை வணங்கிடவே

பாட்டாளி மனமாற குளிர்ந்திடவே

பாட்டெடுத்தெம்மை மயக்கினாயே நீ...! 


உலகில் வாழும் ரசிகர்களின்றி

உன் பிரிவால் துடித்தனரின்று

உளமாற நவிலுகிறேன் இன்று

உன்னுச்சம் தொட எவருண்டு இங்கு...! 


பழகுவதற்கு ஓர்  உடன்பிறப்பாய்

பண்புகளுக்கு ஓர் முன்மாதிரியாய் 

பாடகனுக்கு மேலொரு பாசப்பிணைப்பை

பாரினிலின்று இழந்து நிற்கின்றோம்...!


உன் புகழின் உச்சம் இனி

உருகாது இவ்வுலகில் நீ துணி

உன்பாடலேயிங்கு பலரின் பணி

இது SPBயின் கூட்டணி... 😢😪


                                    -  sironmany -

                                        F M Rozaan 

 



 







Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...