Skip to main content

ZIYARATH


 

!!!நண்பனே


சில்மிஷங்கள் குடிகொண்ட சியாரத்தே

சிதைந்துட்டோம் நாமுனது விபத்தாலே

சிரமங்கள் உனக்கென கேள்வியுற்றோம்

சிரிப்பின்றி நாதியற்று உருகி நின்றோம்..!


விபத்துக்கள் இன்றிங்கு சாதாரணம்

விதிமுறையை மீறுவோரின் அசட்டுத்தனம்

விரைந்துட்டோம் வைத்தியசாலை உனைதேடி

விறைத்துட்டோம் கட்டிலினில் மேலுனைக்கண்டு...!


தலைமுறையாய் நீசெய்த நன்கொடைகள்

தனயனுந்தன் தலையையின்று காத்ததுவே

தவறுசெய்ய நீயென்றும் முனைந்ததில்லை

தவறிக்கூட தப்பெதுவும் நினைந்ததில்லை... 


உயிர்கொடுப்பான் தோழனென படித்ததுண்டு

உண்மையான தோழமையை பார்த்ததுண்டு

உன்னுடைய நண்பர்களை ஒன்று சேர்க்க (YBFல்)

உயிரைக்கூட கொடுக்க இன்று முனைந்ததேனோ???!!!...


நண்பர்கள் பலபேரைக் கண்டதுண்டு

நட்புடன் அகமழிந்து சென்றதுண்டு

நட்புக்கு இலக்கணமா உந்தனுடன்

நண்பர்கள்நாம் எனக்கூற பெருமையடா.!


                                          - sironmany -

                                           F M Rozaan

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...