😢😢 நல்லடக்கம் 😢😢
நெருப்பினில் மனிதம் கருகுதய்யா
நெஞ்சமும் நொறுங்கி சிதறுதய்யா...
வஞ்சங்கள் கொண்ட மாந்தர்தம்
வன்மங்கள் விண்ணையும் முட்டுதய்யா...!
ஜனாஸாவும் பத்துகள் தாண்டுதய்யா
ஜனநாயகம் பொந்தினுல் ஒளிந்ததைய்யா
அரக்கனின் இனவாத அசுரப்பிடியால்
அனைவரின் கண்முன்னே எரியுதய்யா...!
புத்தனைத் துதியும் பெளத்தர்களாய்
புன்னகை மலர பெருமை கொள்ளும்...
புனிதமாம் இலங்கை திருநாட்டினுல்
புரியாத புதிராயொரு எரியூட்டலய்யா...!
தொழில்களில் முடக்கம் கண்டோமய்யா
தொடரான இறுக்கம் கொண்டோமய்யா..
நகரும் துரோக நடத்தைகளால்
நலிந்து துவண்டு வாழ்ந்தோமய்யா...!
வாழ்வுகள் நெருக்கடி ஆனதய்யா
வரம்புகள் மீறியே போகுதய்யா...
வாழ்ந்திட வழியினை தேடியபடி
வாடிய வதனமாயெங்கள் கோலமய்யா...!
மண்ணறை எங்களை மறுக்கலைய்யா
மரணமும் எங்களை வெறுக்கலைய்யா...
மனித நேயமற்ற மனிதர்களால்
மரணித்து புதைப்பதிலும் மாற்றமய்யா...!
நாட்டிற்குள் உரிமைகள் மீறலய்யா
நாளாந்தம் கோசங்கள் ஒலிக்குதய்யா
வாழ்வதற்கும் வழிகேடு எம்மவர்க்கு
சாவதற்கும் சுடுகாடு தலையெழுத்து...!
திருப்பங்கள் சற்றென வந்ததய்யா
தினமழுத நெஞ்சமது நெகிழ்ந்ததய்யா...
வாழ்வதற்கோர் பிடிமாணமாய் நற்செய்தி
வானலாவிய இறைவனிடம் அருள்நேசி...!
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment