Skip to main content

FALEEN NANA


 *பளீல் நாநா*


தன்னையே தனக்காக சிதைத்து

தனியனாய் ஜேயெம்மேக்கு உழைத்து

தற்பெருமை சிறிதுமற கழிந்து

தனக்கென்ற சுகதுக்கம் துறந்து

தன்னுள்ளெழுந்த எண்ணமதை நினைந்து

தனியாக சில திட்டங்களை வகுந்து

தரமாக திறம்படவே நெறியமைத்து 

தனிப்பாணிதனை தன்னிலுள்ளே வகுத்து

தனிப்பெரும் நற்குணங்களின் குவளமாக

தனக்கென்ற சிறார்படையின் தளபதியாக 

தன்நடத்தையால் அனைவர்தனை வென்று

தன்குல மாந்தர்களின் மந்திரியாக 

தனக்கான காந்தக்குரலின் அதிபதியாக

தத்தளிக்கும் விதவைகளின் அரணாக

தயவுடன் குசலம் வினவும் தனயனாக

தனக்குள்ளே பல பரிணாமங்களாக

தன்னுடனெம்மை  கோர்த்து வாழ்ந்த 

தங்க மகன் பளீல் நாநாக்கு

தம்பி என அன்புடன் நீயும்

தட்டி தடவி ஊக்குவித்த

தனயனிவனின் இரங்கல் மடல் இது!!!


மாசு ஏதும் அறவும் அற்ற

மானஸ்தன் எங்கள் யாழ்பளீல்...

மக்கள் மனதில் எப்பவுமே 

மகத்தான இடத்தில் வாழ்பவர்

சூது வாது கள்ளம் கபடம்

சூழ்ச்சி ஏதும் அறியாதவர்

சீற்றத்துடன் எப்பொழுதுமெங்கும்

சினம் கலைந்து கரைபவர்!!


எங்கள் அமைப்பு மேலும் வளர

எம்பிக் குதித்து உழைத்தவர்

மரணப்படுக்கை வேளையிலும் கூட

மறக்காமல் அதை உணர்த்தியவர்

ஏழைகளுக்கு உதவனும் என்றே

எப்பொழுதுமே ஏங்கியவர்

ஊண் உறக்கம்தனை மறந்து 

ஜெயெம்மேவுக்கு பணம் சேர்த்தவர்!!


யாழ்மண்ணின் ஒன்றுகூடலில்

யாழிசை பாடி அசத்தியவர்

மக்களை மகிழ்விக்கணும் என்ற

மனித நேயம் கொண்டவர்

ஓடி நாமும் வந்திரா தூரம்

ஓய்வெடுக்க சென்று விட்டீர்

உன்பிரிவால் ஜேயெம்மே இங்கு

உருகுலைந்து நிற்குது பாரீர்...!!!


கண்ணீருடன் பிரியும் நான்...😢😢😢


                                - sironmany - 

                                  F M Rozaan

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...