அருமையான எந்தன் கவியை
அலங்கோலப் படுத்தி விட்டு
அநாயோதயமாய் அமர்ந்திருக்கும்
அருமை நண்பன் யாழ் பழீலே!
சிங்காரச் சிறு கவி தனை
“சிரோன்மணி” யாய் பெயருமிட்டு
சிங்கமாய் கருவருத்த என்னை
சின்னா பின்னப் படுத்தி விட்டாய்...
மென்மையாய் நானும் எனது
மெல்லிசை தமிழ் வடிவில்
மெதுவாக இயம்பி வந்தேன்
மெல்லிய என் கவித் துளிகளை...
சிம்மமாய் இருந்த என்
சிரோன்மணி எனும் பெயரை
குஞ்சாமனி என்று நீயும்
குறும்பாக மாற்றி விட்டாய்!
வஞ்சியினர் பலரும் வந்து
கொஞ்சிவிட்டு போன எந்தன்
மஞ்சமான இனிய பெயரை
குஞ்சாமனி என எப்படி சொல்வேன்?!!!😇
- sironmany -
F M Rozaan
Comments
Post a Comment