Situation; Husband got captured by terrorised
கவிதை ( 1 )
காதலித்து மணமுடித்தேன்
காளை உன்னுடன் வாழ்ந்திடவே
காலம் செய்த கோலத்தினால்
காத்திருக்கும் கொடுமையின்று....
மாதம் பல உருண்டாலும்
மன்னவன் நானுனை மறவேன்
மங்கையிவள் பலவேளை
மல்லாக்காய் அழுகுகின்றேன்...
விரைவினிலே ஒன்று சேர
விண்ணை நோக்கி கரைகின்றேன்
காத்திருக்கும் நேரமெல்லாம்
கானல் நீராய் கரைந்தனவே!!!
கோலம் பல நான் எடுப்பேன்
கோமகன் உனை மீட்டிடவே
கொடுங்கோலன் செய்த சதி
கொடுமையிலே வீழ்ந்து விட்டான்
பார்த்திருப்பேன் காலமெல்லாம்
பாவை மனம் வதை வதைக்க
பாரினிலே இதுபோலொரு
பாவப்பட்ட ஜென்மமுன்டோ!!!
- sironmany -
F M Rozaan
Comments
Post a Comment