அன்புக்கு அதிபதியே
அருமையான மானுடனே
அனைவரையும் கவரந்திழுத்த
அறிவிப்பாளன் யாழ் பழீலே!
அருஞ் சொல்லால் பல குரலில்
அசத்திய மக்கள் பேச்சாளனே
அருமையான தமிழ்நடை மொழியில்
அள்ளி உதிர்த்த பெட்டகமே!
எங்கள் அமைப்பின் நாயகனே
எம்தலைவரின் மாணிக்கமே
எங்களை என்றும் அசரவிடாது
எழுப்பி விடும் சிநேகிதனே!
உன்மேல் என்றும் பாசம் கொண்டு
உயிருக்குயிராய் பந்தம் கொண்டு
உரிமையாய் தருவாயென கனவு கண்டு
உண்மையாய் இருந்தேன் விழித்துக்
கொண்டு
ஏமாற்றி விட்டாய் நம்பிய என்னை
ஏளன மாக்கினாய் மெய்யான அன்பை
ஏரெடுத்தும் பாராமல் என்னை
எள்ளி நகை ஆடிவிட்டாய் தூய நட்பை..!
அற்பத்தொகை ஏழு காசு
அதிகமில்லை தர முடியாதிருக்க
அநியாயத்திற்கெனை நீயே இங்கு
அசிங்கப்பட வைத்து விட்டாய்..!
பாருலகம் உள்ள வரை
பழீல் நாநாவை நான் மறவேன்
பளிக்கும் ஜேயெம்மே ஜெக்கட்டுக்காக
பழைய பலியை தீர்த்துவிட்டார்..!
- sironmany -
F M Rozaan
Comments
Post a Comment