செந்தமிழில் நடை மொழியும்
செவ்வாழை இள நிறமும்
செவ்வனே கடமை புரியும்
செங்குருதி கொண்டவனே!
சென்றனவே சில காலம்
காணவில்லை உன் கோலம்
ஏனுமின்னும் மாயாஜாலம்
காட்டிடு உன் திருமுகக் கோலம்!
செயலாளன் என்பது ஒன்றின்
செயல்பாட்டினை வழிநடாத்தி
செம்மையாய் சீராய் அதனை
செயல்கொள்ளும் கருமவீரன்..!
நாமுமிங்கு எதிர்பார்க்கும்
நாலாபுறமும் ஒன்றினையும்
நாளாம் அந்த விழா நாளில்
நாயகனாய் நீதான் திகழ வேண்டும்!
உன் மஞ்சம் பார்த்திருக்கும்
நீ அமர காத்திருக்கும்
புன்னகை பொழியும் உன்னுரையில்
அரங்கமே அதிர வேண்டும்!
கவிதை பல இயம்ப இயலும்
கண்ணன் உந்தன் சிறப்பினை பாட
கடமை என்னை அழைக்கின்றது
கண்ணியமாய் நவிலுகின்றேன்!
- sironmany -
F M Rozaan
Comments
Post a Comment