JAFFNA MUSLIM ASSOCIATION
பதினாறாம் பருவ ஆண்டில்
பவனி வரும் ஜே எம் ஏ யே...!
பல நூறுந்தன் சேவையினை
பறைசாற்ற வரைகின்றேன்...
தினம் தினமாம் பல மடல்கள்
தினசரியாம் கோரிக்கைகள்
தினவேளை வாழ்க்கைக்கே
திண்டாடித்திணறும் நமதுறவுகள்...
ஜே எம் ஏ யின் மின்னஞ்சல்தனில்
தேங்கி நிற்கும் நிலுவை அது,
தொங்காமல் தொடர்ந்து உதவ
வங்கியில் பணம் வைப்பில் இல்லை...
தேர்வு செய்து கணக்கில் உள்ள
தேவைகளோ மிக அதிகம்
தேர்ந்தெடுத்து கொடுத்து உதவ
தேடுது மக்கள் நன்கொடை பல...
பதினேழாம் நிர்வாக சபை
பத்திரமாய் வழி நடாத்த
பக்குவமான தலைமையின் கீழ்
பவ்யமான அணிவகுப்பு...
மக்கள் துயர் போக்க என
மக்கள் மனம் வென்று இங்கு
மக்களுக்காய் அவதரித்த
மதிப்பிற்குரிய நிறுவனமே...!
உன்னை நம்பி பல்லாயிரம்
உருகி மருகி ஏங்கி நிற்க
உதவிக்கரம் நீட்ட அங்கு
உடனடியாய் சென்றிடுவாய்...!!!
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment