செங்குருதி கொண்டோனே
செயல்பாட்டு நாயகனே
பலவருடம் உனைக் காணா
பரிதவிப்புடன் வரைகின்றேன்...!
நீயின்றி நானும் இங்கு
நிலைகுலைந்து தவிக்கின்றேன்
நிஜமாக திரும்பி உந்தன்
நிதர்சனத்தை ஏங்குகின்றேன்...!
நாட்கள் பல கடந்துமின்னும்
நாயகனின் வெண்முகத்தை
நாசுக்காக மீண்டும் நோக்க
நாயனேதான் நாட வேண்டும்...!
கூட்டமாக ஒன்று சேர்ந்த
கூட்டணியாம் *YBF* இன்
கூரிய வளர்ச்சி பற்றி
கூடுதல் கவலை கொண்டீர்...!
நேசமுடன் நாமும் ஒன்றாய்
நேரிய பாசத்துடன் இங்கு
நேர்த்தியாக நடக்க வேண்டி
நேரம் ஒதுக்கி பாடுபட்டீர்...!
சாணக்கிய அனுகு முறையால்
சாமர்த்திய தீர்வுகள் கூறி
சாதாரண எங்களையும்
சாவகாசமாக இயங்க வைத்தீர்...!
மீண்டும் நட்புக் கூட்டணியில்
மீழெழுந்து நாமும் செல்ல
மிக விரைவில் ஒன்றுகூடி
உண்டு மகிழ வேண்டி நிற்கும்.......!!!
உங்கள் அன்பின்
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment