என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்……..!!! ...

Comments
Post a Comment