காமுகர் ஐவர் கையில்
காயமே பட்டாள் எங்கள்
ஆஸீபா என்னும் பெண்ணின்
ஆத்மார்த்த கதையை கேளீர்...
எட்டு தான் வயசு இன்று
எட்டாக் கனியாய் ஆனாள்
தொட்டுத்தான் நாமும் பார்க்கா
தொலைதூரம் தனியே போனாள்...
குதிரை தொலைந்ததை எண்ணி
குமுறிக் குமுறி அவளும் தேட
காட்டுக்குள் அழைத்துச்சென்றான்
காதகன் வஞ்சகமாக...
ஊருக்கு நாட்டாமை அவராம்
அவரோட வாரிசுவுந்தான்
மருமகனை யுடனழைத்து
கூட்டாக சென்ற னராம்....
பச்சப் பிஞ்சு உள்ளம்
பயத்தினில் வெம்பித்துடிக்க
பட்டினியில் போட்டு அவளை
பலபேரும் ஒன்றாய் மேய...
நெஞ்சு துடிக்கு திங்கு
பிஞ்சு பறக்க கணக்கு திங்கு
அஞ்சலையின் அழுகையோலம்
மஞ்சத்தையே வெறுக்கு திங்கு...
போதையினை கொடுத் தவளை
போதி மரத்திற் கடியில் வைத்து
எண்ணி எட்டு நாள் கணக்காய்
கோணியிலே அவளை சுத்தி....
பண்ணிய கொடுமை தனை
பட்டியலிட்டால், முடியாது
பாவப்பட்ட பிஞ்சு நெஞ்சம்
பாடுபட்ட துயரை எண்ணி ...
ஓடி விடக் கூடாதென
ஒற்றைக் காலையும் ஒடித்து விட்டு
ஒன்றாக குழுமி அங்கு
கலவிக் கொண்டாட்டமொன்று....
எட்டு வயசுச் சிறுமியடா
ஏட்டுக்கல்வி தெரியாதடா
ஏழைத்தாயின் ராணியடா
எங்க குல வம்சமடா....
வஞ்சகன் காமப் பிடியில்
வதைவதைக்க இறந்தே போனாள்
வஞ்சியின் மரண ஓலம்
வன்மமாய் கொல்லுதிங்கே....
சிறுமியின் சிதைந்த மரணம்
சிந்திக்க வைத்த தின்று
சீரழிந்து போனதிங்கு
சீரான பண்பாடொன்று...
கூரான வாளெடுத்து
கூரு கெட்ட கயவர்களை
கூறு போட வேண்டுமென்டு
கூப்பாடு போடக்கேட்டேன்
கூட்டமாக கொதித்தெழுந்த
கோடான கோடி மக்கள் ...
நேரான வாழ்வி யலில்
நேர்த்தியான வழிமுறைதனில்
சீராக வாழாதிருந்தோர்
சீரழிந்தே போயி உளர்...
நாதாரிக் கூட்டமடா
நாயை விட கேவலன்டா
கடவுள் வாழும் கோயிலிலே
கற்பழிப்புக் கோலமடா!!!...
மழலையவள் மதிவதனம்
மனக்கண் முன் வந்து போக
குருதியுந்தான் கொதிக்கு திங்கு
குத்திக் கொல்ல ஏங்குதிங்கு......
கல்லெறிந்தே கொல்லணுன்டா
கடும் பசியினில் போடணுன்டா
காமக் கொடியவன் இனை
கதரக்கதர கொல்லணுன்டா...
சிறுமி போல இன்னுமிங்கு
சிறார்பல உள்ளாரெங்கும். கடும்
தண்டனை இயற்ற வேண்டும் அதில்
தலையைத்தான் கொய்ய வேண்டும்.
வம்ச விளக் கிதடா
வலுவில்லா சிறார்களடா
கண்ணியமாய் நடத்தணுன்டா
கெளரவமாய் பேசணுன்டா...
உன் இச்சை போக்கவென்றே
உள்ளூர் விலைமாதர் பலரிருக்க
பட்டப் பகலிலேயே
பகைதீர்த்த ஈனவன்டா....
இறைவனென்று ஒருவன் உள்ளான்
இரட்சிப்பவரை காத்திடுவான்
கோடான கோடிகளின்
கோரிக்கையை ஏற்றிடுவான்....
இவ்வுலகில் மடியுமுன்னர்
இறுதிமூச்சு போகு முன்னர்
இறைவனுனக்கு காட்ட வேண்டும்
இரைந்து நசிந்து பொசுங்க வேண்டும்.....!!!
நாசமாய் போனவனே..,
நாதாரிக் கும்பலனே..,
நாளைய சந்ததி முன்
நாறியே போயி நிற்பாய்!!!
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment