செயலாளர் நாயகமே எங்கள்
செயல்பாட்டு நாயகனே
பலநாட்கள் உனைதேடி
பலனின்றி வரைகின்றேன்.
நீயின்றி நாங்கள் இங்கு
நிலைகுலைந்து தவிக்கின்றோம்
நிஜமாக திரும்பி உந்தன்
நிதர்சனத்தை ஏங்குகின்றோம்.
நாட்கள் பல கடந்துமின்னும்
நாயகனின் செங்குரலை
நாசுக்காயினும் மீண்டும் கேட்க
நாயனேதான் நாட வேண்டும்.
கூட்டமாக ஒன்று சேர்ந்த
கூட்டணியாம் ஜேயெம்மேயின்
கூரிய வளர்ச்சி பற்றி
கூடுதல் கவலை கொண்டீர்!
நேசமுடன் நாமும் ஒன்றாய்
நேரிய பாசத்துடனும்
நேர்த்தியாக நடக்க வேண்டி
நேரம் ஒதுக்கி பாடுபட்டீர்.
சாணக்கிய அனுகு முறையால்
சாமர்த்திய முடிவுகளெடுத்து
சாதாரண எங்களையும்
சாவகாசமாக இயங்க வைத்தீர்.
மீண்டும் உந்தன் கூட்டணியில்
மீழெழுந்து நாமும் செல்ல
மிக விரைவில் நீயும் இங்கு
மீண்டு வர வேண்டி நிற்கும்.......
JMA TEAM 😢😢😢
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment