அமுத எழில் கொண்ட
அழகு தேவதை ஆசிபாவே!
அரபு நாட்டில் குடியிருக்கும்
அன்பர் ஷானாஸிடம் செல்லாயோ....
ஆருயிர் தோழனவன் மிக
ஆதரவு தந் திடுவான்
ஆளில்லா துயர்தனையே மனதார
ஆற்றிடுவான்...
கேட்போருக்கு இல்லையென்ற
கேள்விக்கே இடமில்லையங்கு
துணிச்சலுடன் உன்னருகே
தோளோடு தோள் நிற்பான் ...
நீதிக்காய் குரல் கொடுக்கும்
நீதமான நண்பனவன்
நெஞ்சினிலே சுமந்திடுவான்
நேசமுற காத்திடுவான்...!!!
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment